நரகத்திற்கு போவபர்கள் சரீரபிரகாரமாக தாகத்திற்காய் அவதிப்படுவார்கள். அது ஒருபோதும் அவியாததாக இருக்கும். ஆபிரகாமை பார்த்து ஐசுவரியவான் கெஞ்சி கேட்டுக்கொண்டதை பாருங்கள்“லாசாருவை அனுப்பி அவன் சுண்டுவிரலின் தண்ணீரினால் என் நாவை குளிர பண்ணும்” (லூக்கா 16:24) இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குளிரில்லாமல் அனுபவிக்க சுத்த தண்ணீரில்லாமல் நித்தியத்திலே ஒவ்வொருநாளும் கஷ்டப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? மனிதனுடைய நித்திய தாகத்திற்கு ஒரு பதில் உண்டு,



இயேசு கிறிஸ்து


இயேசு கிறிஸ்து சொல்கிறார் அவரே ஜீவ தண்ணீராகவும் அவரிடத்தில் வருகிறவர்களின் தாகத்தை தீர்க்கிறவராகவும் இருக்கிறார்.


“இயேசு அவளுக்கு பிரதியுத்திரமாக :நீ தேவனுடைய ஈவையும் , தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவ தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்” (யோவான் 4:10)


இயேசு கிறிஸ்துவினுடைய ஜீவ தண்ணீரை நீங்கள் எப்போதாகிலும் சுவைத்ததுண்டா? நீங்கள் வரண்டு காய்ந்து போய் இருக்கிறீர்களா?

நித்திய தாகத்தில் அவதிப்பட வேண்டாம்!

இன்றைய நாளை நீங்கள் இயேசுவை கர்த்தரும் இரட்சகருமாக ஏற்றுக் கொள்ளும் நாளாக்குங்கள்!




அடுத்தது