நரகத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள் நித்திய பிரிவினையை அனுபவித்து துன்பப்படுவார்கள். அவர்கள் "பெரும் பிளப்பை"அறிவார்கள் ( லூக்கா 16 : 26 ). அது அவர்களுக்கும் தேவனுக்கும் மத்தியில் இருக்கும். பூமியில் இருக்கும் போது, அவர்கள் எல்லா நன்மையான காரியங்களையும் அனுபவித்தார்கள் இப்பொழுது தேவனுடைய எல்லா நன்மையான ஈவுகளிலிருந்தும் பிரிக்கப்படுவார்கள்.நாம் எல்லோரும் நகைச்சுவையாக இப்படி கேட்டிருப்போம் "நான் தனியாக நரகத்தில் இருப்பதில்லை. என்னுடைய எல்லா நண்பர்களும் அங்கே இருப்பார்கள்." இவர்கள் அங்கே அக்னி ஜீவாலையில் நித்திய துன்பத்தில் நட்புக்கு ஒரு மதிப்பும் இல்லை என்று உணர்ந்து கொள்வார்கள்.



அவர்களின் அவநம்பிக்கையின் சூழ்நிலையை அறிந்து துன்பப்படுவார்கள். இரண்டாம் தருணம் என்பது அங்கே கிடையாது.அவர்கள் பார்க்கும் நரகம் அவர்களுடைய நித்திய இடம் ஆகும். அங்கே இருந்து தப்பிக்க முடியாமல் அங்கேயே என்றென்றும் துன்பப்படுவார்கள். ஐசுவரியவானுக்கு ஆபிரகாம் சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்?



"அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்து வரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு , எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்" ( லூக்கா 16 : 26 )



தயவு செய்து இன்றைக்கே இப்பொழுதே செயல்படுங்கள். உங்களுக்கு நேரம் இருக்கும் போதே! இயேசு உங்கள் நண்பனாகவும் இரட்சகராகவும் இருக்க ஆவலோடு இருக்கிறார். அவர் ஒரு நண்பனாக உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் கதவை தட்டியவாறு நினையுங்கள். ஒவ்வொரு நாளும் அந்த தட்டுதலுக்கு பதிலளிக்க நீங்கள் மறுக்கிறீர்கள்...... ஒரு நாள் அவர் வருவதை நிறுத்துகிறார். இயேசு வேண்டாம் என சொல்லாதீர்கள். எபிரெயர் 3:7,8 சொல்லுவதை வாசிக்கவும்.



"ஆகையால் பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே : இன்று அவருடைய சத்தத்தை கேட்பீர்களாகில். " ( எபிரெயர் 3 : 7 ).



நீங்கள், இன்றைய நாளை இயேசுவை கர்த்தரும் இரட்சகருமாக ஏற்றுக்கொள்ளும் நாளாக மாற்றுங்கள்!




அடுத்தது