உங்களது மனசாட்சியும் நினைவுகளும் நிரந்தரமாக துன்பப்படும் வியாகுலபடும். நீங்கள் மற்றவர்களை நரகத்திற்கு அனுப்பியதற்காக வருத்தப்படும். உங்களுடைய குடும்பம் , நண்பர்களை நீங்கள் நேசித்திருக்கலாம், ஆனால், நீங்கள் இயேசுவை நம்பவில்லை என்றால், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை என்றால் நீங்கள் மரித்து நரகத்திற்கு போவீர்கள். நீங்கள் இரவும் பகலும்,உங்களுக்கு பிரியமானவர்களும், உங்கள் குடும்பமும் உங்களை தொடர்ந்து நரகத்திற்கு போவார்கள் எனதுன்பப்படுவீர்கள். ஏனென்றால் :


நீங்கள் இயேசுவை பற்றி அவர்களுக்கு போதிக்கவில்லை.

வேதத்தை விசுவாசிக்கும் சபைக்கு நீங்கள் அவர்களை கொண்டு செல்லவில்லை.

நீங்கள் அவர்களை தவறான மதத்தில் போதித்தீர்கள்.


“அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே,எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி : அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன் : அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி கொடுக்காவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்து போனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்" ( லூக்கா 16 : 26 -31 ).


பரிசுத்த ஆவியானவர் உங்கள் பாவத்தை குறித்து உணர்த்திய போது ,இயேசு கிறிஸ்து உங்களுக்கு இரட்சகராக தேவை என்று சொல்லியபோது நீங்கள் உங்களுடைய பாவங்களை நினைவு கூறுவீர்கள். கிறிஸ்துவர்கள் எப்படி உங்களுக்கு இரட்சிப்பின் திட்டத்தை அறிவித்தார்கள் என்பதையும் நினைவு கூறுவீர்கள். ஆபிரகாம் ஐசுவரியவானிடத்தில் “நினைத்துக்கொள்” என்று சொன்னதை பாருங்கள்.

"அதற்கு ஆபிரகாம் : மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங்காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய் , லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்". ( லூக்கா 16:25 ).


அடுத்தது