வெறுக்கப்படுவதற்கும் வெட்கப்படுவதற்கும் சிலர் உயிர்தெழுவார்கள். "பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும் , சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்" ( தானியேல் 12 : 2 ). அவிசுவாசிகளாகிய இவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு, அவர்களுடைய பாவங்களில் வெட்கத்தில் அக்கினி கடலுக்கு அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு நித்திய உபத்திரவம் உண்டு, தங்களுடைய சூழ்நிலையை என்றென்றும் வெறுப்பார்கள். இவர்களில் அநேகர் அக்கினி கடலுக்கு தள்ளப்படுவார்கள் ஏனென்றால் அநேக மதக்குழுவினர் தவறாக இவர்களுக்கு இன்றைக்கு போதித்து வருவதால் தான். இவர்களில் சொல்லுவது அன்பும் பரிசுத்தமும் உள்ள ஆண்டவர் ஒருவரை நரகத்தில் நித்தியமாக துன்பப்பட அனுமதிக்கமாட்டார் என்னும் தவறான போதனை தான். உண்மை என்னவென்றால் தேவன் இயேசுவை புறக்கணிப்பவர்களை நரகத்தில் நித்திய ஆக்கினைக்கு ஒப்பு கொடுப்பார். இந்த குறிப்பை அநேகர் தவறவிடுகிறார்கள். தேவன் ஒருவரையும் நரகத்திற்கு அனுப்புவதில்லை. அவர் நம் ஒவ்வொருவரையும் சுயாதீன முடிவுகளை எடுக்கும் வண்ணமாக தான் சிருக்ஷ்டித்திருக்கிறார். ஆகவே நாம் நரகத்திற்கு சென்றால், அது நாம் அங்கே செல்ல தெரிந்தெடுத்தது தான். வேதம் தெளிவாக பரலோகத்திற்கு செல்லும் வழியைக் குறிக்கிறது. ஆனால் அது நம்மை நம்முடைய பாவத்திலிருந்து , மனந்திரும்புதல் இயேசுவை விசுவாசிக்கவும் அவசியத்திற்குள்ளாக்குகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் பிராயசித்த பலியை புறக்கணிக்கும் அவிசுவாசி ஆக்கினை தீர்ப்பை சம்பாதிக்கிறான். "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்" ( ரோமர் 6 : 23 ). "என்னவென்றால் , கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு , தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (அப்போஸ்தலர்10: 9 ) "அப்படியிராதபடியால், இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசனத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின் கீழ் அடைத்துப்போட்டது" (கலாத்தியர் 3 : 22 ). தேவன் நம் ஒவ்வொருவருக்கும் எண்ணிலடங்காத வாய்ப்புகளை அவருடைய சத்தியத்தை கேட்கும்படி கொடுத்திருக்கிறார். அது நமக்கு மரணத்தின் மீது ஜெயத்தை பெறும் வழியை காட்டுகிறது. தேவன் உங்களை நரகத்திற்கு முன்பதிவு செய்வதை விரும்பவில்லை. அவர் எல்லோரும் மனந்திரும்ப வேண்டும் என விரும்புகிறார் : "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குவாதத்தைக் குறித்துத் தாமதமாயிராமல் ; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் " ( 2 பேதுரு 3 : 9 ). |