ஒருவர் நரகத்தில் சிறைபட்டிருக்கலாம் ஏனெனில் அவர் அனேகரால் இன்று போதிக்கப்படும் அன்பான சுவிஷேசத்தின் சத்தியத்தை புறக்கணித்திருக்கிறார்.


ஒரு அருமையான வாலிபன் என்னிடம் சென்ற வாரம் கேட்டார் “என்னுடைய சபை எனக்கு போதிப்பது என்னவெனில் பரலோகத்தை சென்றடைய அனேக வழிகள் உண்டு . அடிப்படையில் நாம் எல்லோரும் ஒரே தேவனை வணங்குகிறோம் அவரை இயேசு, புத்தர், அல்லா...என பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம். அடிப்படையான உங்கள் போதனைகள் குறுகிய சிந்தையை உடையது என நீங்கள் விசுவசிக்கவில்லையா?”


ஒரு போதும் இல்லை!



“குறுகிய சிந்தையை” பற்றி ஆண்டவர் சொல்லாமல்“குறுகிய வழியை” பற்றி சொல்லி இருக்கிறார்


"இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதன் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழிநெருக்கமாயிருக்கிறது ; அதை கண்டுபிடிப்பவர்கள் சிலர்" ( மத்தேயு 7 : 13-14 ).





தேவன் வேறு தெய்வங்களை ஆராதனை செய்வதை தடை செய்கிறார்.


"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" ( யாத்திராகமம் 20 : 3 )


"நான் உங்களுக்கு சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பெயரைச் சொல்ல வேண்டாம் ; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம் " ( யாத்திராகமம் 23 : 13).


"கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது , அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால் அந்நிய தேவனை நீ பணிந்து கொள்ள வேண்டாம்" ( யாத்திராகமம் 34 : 14 ).:


இரட்சிப்புக்காக உள்ள நம்முடைய நித்திய நம்பிக்கை" குருகலானது". ஏனென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதை சொல்லியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே ஒருவர் நித்திய ஜீவனை பெற முடியும்:


"போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேற அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது" ( 1 கொரிந்தியர் 3 : 11 ).


"ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்" ( யோவான் 17 : 3 ).

"அதற்கு இயேசு : நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் ; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" ( யோவான் 14 : 6 ).


உங்களது சபையானது வேறு தேவர்களின் மூலம் இரட்சிப்பு உண்டு என போதித்தால், தாமதமின்றி அந்த கள்ள போதனையிலிருந்து உடனடியாக நீங்குங்கள். புதிய ஏற்பாடு வேதத்தை மையப்படுத்திய சபையை கண்டுபிடிங்கள். வேதம் மாத்திரமே , மனுக்ஷருடைய வார்த்தைகள் அல்ல என அது போதிக்கும். இயேசு கிறிஸ்துவை தவிர வேறு வழியை பின்பற்றுவது நித்திய ஆக்கினையில் கொண்டு செல்லும்.


அடுத்தது