உங்களது தற்போதய வாழ்க்கையில் ஞாயிறு காலையில் தாமதமாக உங்களது சொகுசு மெத்தை தலையனை மீது தூங்க செல்ல நினைப்பிர்கள். இதற்காக வெட்கப்படுங்கள். இயேசுவை உங்கள்ஆத்துமாவை காக்கிறவர் என நீங்கள் நம்பவில்லை என்றால் , ஒரு மாறுதல் வரும். அது இளப்பாறுதலே இல்லாத நரகத்தில் நீங்கள் எழுந்திருக்கும் ஒரு நாளாக இருக்கும். வேதம் சொல்லுகிறது நரகத்தில் இரவும் பகலும் நித்தியமாக வேதனை உண்டு... “மேலும் அவனை மோசம் போக்கின பிசாசானவன் , மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சாதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்” (வெளிப்படுத்தின விஷேசம் 20:10). நரகத்தில் ஜனங்கள்பார்க்க , கேட்க, தொட, சுவைக்க, உணர முடியும். இது நமக்கு லூக்கா 16:19-13 ல் உள்ள ஐசுவரியவானிலிருந்து தெரியும். அவன் ஆபிரகாமை "பார்க்க",அவருடைய சத்தத்தை "கேட்க" வேதனையின் அக்கினியை "தொட" , தண்ணீரை"சுவைக்க", கந்தகத்தை" உணர"முடிந்தது. (வெளிப்படுத்தின விஷேசம் 21:8). இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி என்னவெனில் , இயேசு உங்களுக்கு ஒரு விஷேச இடத்தை அவரிடத்தில் ஆயத்தப்படுத்தியிருக்கிறார்: “பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொருவாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி நெளிவுள்ள பலிங்கு போலச் சுத்தப் பொன்னாயிருந்தது. அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். நரகத்திற்கு வெளிச்சங்கொடுக்க சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் . பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். அங்கே இராக்காலம் இல்லாதபடியால் , அதன் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. உலகத்தாருடைய மகிமையும் கணத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்வர்கள் மாத்திரமே அதில் பிரவேசிப்பார்கள்” (வெளிப்படுத்தின விஷேசம் 21:21-27). ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டுள்ளதா? முழு உறுதியோடு ஆம் என நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், இப்பொழுதே இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் உங்கள் கேள்விக்கு தீர்வை காணுங்கள்.
அடுத்தது |