உண்மையாகவே நீங்கள் மரிக்கும்போது உங்களோடு உங்களது உடைமைகளை கொண்டு செல்ல முடியாது. அப்படியென்றால் உங்களது வீடு, வாகனம், பணம், பதவி மற்ற எல்லா பொருள்களும் உடைமைகளும் உங்களுக்கு எந்த ஒரு நன்மையும் வழங்குவதில்லை. “அவன் மரிக்கும் போது ஒன்றும் கொண்டு போவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்லுவதுமில்லை” ( சங்கீதம் 49 : 17 ) ““தன் தாயின் கர்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்தது போலவே நிர்வாணியாய்த் திரும்பிபோவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு போவதில்லை” ( பிரசங்கி 5 : 15 ) பூமிக்குரிய பொக்கிஷங்களை சம்பாதிப்பதில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை செலவழிக்கிறீர்களா? இனிமேல் உள்ள வாழ்க்கைக்கு ஆயுத்தங்களை செய்துவிட்டீர்களா? உங்களது ஆவிக்குரிய கணக்கு தொகை சரியாக உள்ளதா? அல்லது அவற்றை முற்றிலும் இழந்துவிட்டிர்களா? |