உண்மையாகவே , நீங்கள் நரகத்துக்கு சென்றுவிட்டால் சாத்தானுடைய நட்பில் இருப்பீர்கள். வேதம் நமக்கு சொல்கிறது, சாத்தான் தன் கடைசி யுத்தத்தில் தோல்வியடைந்ததும் நித்திய ஆக்கினை தீர்ப்புக்கு அவன் நியமிக்கப்படுவான்:


“வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுச்சர்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடே கூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.” ( வெளிப்படுத்தின விஷேசம் 12 : 7-9 )


உங்களுக்கு ஒரு முக்கியமான தனிப்பட்ட அல்லது தொழில் ரீதியில் ஒரு தீர்வு எடுக்க வேண்டும் என்றால் , அப்படி தீர்வு எடுப்பதற்கு ஒரு பொய்யனின் வார்த்தையை சார்ந்து இருப்பீர்களா? நிச்சயமாக இல்லை! உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க தேவனுடைய வார்த்தையை தவிர வேறு எதிலாகிலும் நீங்கள் நம்பிக்கை வைத்ததுண்டா?


“அப்படியாக்கமாட்டாது: நீர்உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும் போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனை சத்தியபரர்என்றும் , எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக” ( ரோமர் 3 : 4 )

நீங்கள் தேவனை பின்பற்ற வேண்டும் என நான் ஜெபிக்கிறேன். நீங்கள் அவரை பின்பற்றவில்லை என்றால்“பொய்யுக்கு பிதா”வாக இருக்கிற சாத்தானை பின்பற்றுகிறீர்கள்.

“நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” ( யோவன் 8 : 44 )






நீங்கள் பொய்யை பின்பற்றுகிறீர்களா? நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இதயத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், உங்கள் பாவத்தைவிட்டு மனந்திரும்பி இயேசுவே என்னை இரட்சியும் என்று சொல்லவில்லை என்றால், நீங்கள் பாவத்தில் மரித்து நித்திய தண்டனையை அடைவீர்கள்.

அடுத்தது