சாத்தானைக் குறித்தும் அவன் உங்களுக்கு கொடுப்பது அழகானது என்பதை குறித்தும் நீங்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறீர்கள். அவனுடைய உண்மையான தன்மை வெளிப்படும் போது, அது இந்த பயங்கர சிருஷ்டியின் தோற்றத்திற்கு நெருங்கியதாக இருக்கும்.


“ மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக் குறித்துப் புலம்பி , அவனை நோக்கி; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யபட்ட முத்திரை மோதிரம் ; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.'' ( எசேக்கியேல் 28:12 )


இந்த வேதபகுதியின் மொழியானது தீருவின் ராஜாவை விட சாத்தானுக்கு அதிகமாக பொருந்தும். அவன் தீருவின் ராஜாவை போல பெருமையும் கர்வமும் காணப்படாத ரீதியில் எல்லாரையும் ஆண்டு ஏவுகிறவனாக இருக்கிறான். இத்தரிசனமானது சாத்தானை அவனுடைய தோற்றத்தில் அல்ல, மாறாக அவன் எப்படி பூமிக்குரிய ராஜாவில் மற்றும் ராஜாவின் மூலமாக தன் காரியங்களை சாதித்து தேவனுக்குரிய கனத்தை தனக்கெடுத்துக்கொண்டு தவறாக செயல்படுபவனாக இருப்பதை இங்கே அறிந்துகொள்ளலாம் . தீருவின் அதிபதியானவன் ஓரு கொடிய துஷ்டமிருகத்தை காட்டுகிறான்.


சாத்தான் உங்களை உபயோகிக்க நீங்கள் அவனுக்கு அனுமதி அளிக்கிறீர்களா? நீங்கள் அனுமதி அளிக்க கூடாதென்று உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன். நீங்கள் நீங்களாகவே இருந்தீர்களென்றால் சமயம் நெருங்கும் முன்னமே உங்கள் பாவத்தைவிட்டு திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள். பாவம் என்பது தேவனோடு ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. தேவனுடைய வார்த்தை நமக்கு உறுதியளிப்பது என்னவென்றால் பாவம் செய்த தூதர்களும் நரகத்துக்கு தள்ளப்படுவார்கள்.


" பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிட்டால் ,அந்தகாரச்சங்கிலிகளிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாய தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து ; ” ( 2 பேதுரு 2 : 4 )


இப்பொழுதே நீங்கள் இதைப்படித்துக்கொண்டு இருக்கும்போது நீங்கள் ஏன் ஒரு தீர்மானம் எடுக்கக்கூடாது. நீங்கள் கர்த்தராகிய இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது தேவன் உங்களுக்கு ஜீவ வரத்தை தருவதை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இதை செய்யும்போது , பாவத்தின் தண்டனையிலிருந்து (மரணம்) நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள். இதை இப்பொழுது செய்வீர்களா?

அடுத்தது