> Hells Truth -Home of the Damned!






இந்த பிசாசோடு உங்கள் நித்திய காலத்தை செலவழிக்க எப்படி நீங்கள் விரும்புவீர்கள்? பாவத்தில் விழப்பட்டு நரகத்திற்கு செல்லுகிற மனிதன் பிசாசின் நட்பில் இருப்பது உறுதி தான் ; தேவனுடைய வார்த்தையை பரிசோதிப்பதின் மூலம் நமக்கு இது தெரிகிறது :

"அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்த போது , பிசாசு பிடித்திருந்த இரண்டு பேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு , அவருக்கு எதிராக வந்தார்கள் ; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக் கூடாதிருந்தது. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே தேவனுடைய குமாரனே , எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வரும் முன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள் " ( மத்தேயு 8:28-29 ).


" அவர் கரையிலிறங்கின போது , நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுக்ஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான். அவன் இயேசுவைக் கண்ட போது கூக்குரலிட்டு , அவருக்கு முன்பாக விழுந்து : இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உனக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாத படிக்கு உம்மை வேண்டிக்கொள்கிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான் ". (லூக்கா 8 :27-28 ).


இந்த படமானது ஒரு தனிப்பட்ட பிசாசானவன் என்னவாக தோற்றமளிப்பான் என்று ஒரு கலைஞனின் எண்ணம் மட்டுமே ஆகும். உண்மையாக, நரகத்திலுள்ள நிஜ பிசாசுக்கள் ஒருவர் வர்ணித்து விவரிப்பதைக்காட்டிலும் " கொடூர பயங்கரமுள்ளவைகளாக " தான் இருக்கும்.......


நீங்கள் பாவத்தில் விழப்பட்டவர்களாக இருக்கிறீர்களா? நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்களுடைய சொந்த இரட்சகராக விசுவாசிக்கவில்லை என்றால் , நீங்கள் உங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பி, இயேசுவே எங்களை இரட்சியும் என அவரை அiக்கவில்லை என்றால் , நீங்கள் பாவத்தில் விழப்பட்டு நரகத்தில் உங்கள் நித்தியத்தை செலவழிப்பீர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.



அடுத்தது