Is Jesus the only way to Heavenபரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா?“அடிப்படையிலே நான் நல்ல மனிதன், ஆகவே, நான் பரலோகம் செல்வேன்” " நான் சில தீய காரியங்களை செய்திருந்தாலும், அதைவிட அதிகமாக நல்லகாரியங்களை நான் செய்கிறபடியால், நநன் பரலோகம் செல்வேன்." “ நான் வேதாகமத்தின்படி வாழவில்லையென்பதற்காக, தேவன் என்னை நரகத்திற்கு அனுப்பமாட்டார். காலம் மாறிவிட்டது!” உண்மையிலேயே மிகவும் மோசமானவர்களான குழந்தைகளுக்கு எதிராக பாலியல்ரீதியாக குற்றம்செய்கிறவர்கள், கொலைகாரர்கள் போன்றவர்கள்தான் நரகத்திற்கு செல்வார்கள்.” இவைகள் ஜனங்களிடத்திலே, காணப்படும் பொதுவான விளக்கங்களா ஆகும். ஆனால் உண்மையென்னவெனில் இவைகள் அனைத்தும் பொய்யானவைகள். உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் நம் சிந்தையில் இப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கிறான். சாத்தானும், அவனுடைய வழிகளைப் பின்பற்றுகிற எவரும் தேவனுக்கு பகைவர்கள் (1பேதுரு 5:8). சாத்தான் ஒரு ஏமாற்றுக்காரன், அவன் எப்பொழுதுமே தன்னை நல்லவனாக காண்பிக்கிறான் (2கொரிந்தியர் 11:14). ஆனால் தேவனைச் சார்ந்திராத மனங்கள் அனைத்தின் மீதும் அவனுக்கு ஆளுகை உண்டு. "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." (2கொரிந்தியர் 4:4). தேவன் சிறிய பாவங்களைக் கண்டு கொள்வதில்லை அல்லது நரகமானது மிகவும் மோசமானவர்களுக்கே நரகம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவது ஒரு பொய் ஆகும். "ஒரு சிறிய பொய்" உட்பட எல்லாப் பாவமும் தேவனைவிட்டு நம்மை பிரிக்கிறது. எல்லாரும் பாவஞ்செய்து தாங்களாகவே சொந்த பிரயாசத்தினால் பரலோகத்தில் பிரவேசிக்கத்தக்க அளவில் நல்லவர்களாக இல்லை(ரோமர் 3:23). பரலோகத்திற்குள் செல்வது என்பது நன்மையானதைக் காட்டிலும், தீமை குறைந்த அளவில் இருப்பதை அடிப்படையாக வைத்து நடைபெறுகிற ஒரு காரியம் அல்ல. "(இரட்சிப்பு) கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது அப்படியல்லவென்றால் கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது (ரோமர் 11:6). பரலோகத்தில் செல்வதற்கான வழியைப் பெற நாம் எதுவும் செய்ய முடியாது(தீத்து. 3:5). "இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்@ கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது@ அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்" (மத்தேயு 7:13). தேவனை நம்புவது என்பது மிகவும் குறைவாக இருக்கிற ஒரு கலாச்சாரத்தில் எல்லோரும் பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட, தேவன் அதை மன்னிக்கமாட்டார். "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்;ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்" (எபேசியர். 2:2). தேவன் உலகத்தை சிருஷ்டித்த பொழுது, அது பூரணமானதாகவும், நல்லதாகவும் இருந்தது. பின்பு அவர்ஆதாமையும், ஏவாளையும் சிருஷ்டித்தார். மேலும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிவதோ? அல்லது தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுவதோ? அல்லது இல்லையோ என்ற தெரிந்துகொள்ளுதலாகிய சுய சித்தத்தை, அவர்களுக்கு தேவன் கொடுத்தார். ஆனால் அவர்கள் தேவனுக்கு கீழ்படியக் கூடாதபடிக்கு சாத்தானால் சோதனைக்குட்படுத்தப்பட்டு, பாவம் செய்தார்கள். இது அவர்கள்( அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொருவரும்) தேவனோடு ஒரு நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளக் கூடிய நிலையிலிருந்து பிரித்துவிட்டது. தேவன் பரிபூரணமுள்ளவர், அவர் பரிசுத்தமானவர். ஆகவே பாவத்தை நியாயந்தீர்த்தே ஆக வேண்டும். நாம் பாவிகளாயிருப்பதினாலே நம் சுய முயற்சியினால் நாம் தேவனுடன் நம்மை சீர்பொருந்தச் செய்யமுடியாது. ஆகவே நாம் பரலோகத்தில் தேவனுடன் இணைக்கப்படும்படியாக ஒரு வழியை உண்டாக்கினர். "தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனையடையும்படி, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16). " பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ,நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்(ரோமர் 6:23). நாம் அழியாதபடி, நமக்கு வழியைக் காண்பிக்கும்படி இயேசு கிறிஸ்து பிறந்து அவர் தாமே நமது பாவங்களுக்காக மரித்தார். அவர் தாம் மரித்து மூன்று நாட்களுக்குப் பிறகு கல்லறையிலிருந்து உயிர்த்தெழும்பி, மரணத்தின் மீதான தனது வெற்றியை நிரூபித்தார். ஜெயத்தை பெற்றுக் கொண்டதற்கு (ரோமர் 4:25). தேவனுக்கும், நமக்கும் நடுவாக இருந்த பிளவை கிறிஸ்து இணைத்தார். நாம் விசுவாசித்தால் மாத்திரமே நாம் அவருடன் ஒரு தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்க முடியும் “ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” (யோவான் 17:3). அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள், சாத்தானும் கூட விசுவாசிக்கிறான். இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு, மனந்திரும்பி, பாவங்களைவிட்டு விலகி அவரோடு ஒரு தனிப்பட்ட உறவை உருவாக்கி, அவரைப் பின்பற்ற வேண்டும். நாம் செய்கிற மற்றும் நம்மிடம் இருக்கிற அனைத்துக் காரியங்களிலும் இயேசு கிறிஸ்துவை நாம் நம்ப வேண்டும். "அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை" (ரோமர் 3:22).கிறிஸ்துவின் மூலமாகவேயன்றி இரட்சிப்பு இல்லையென்பதை வேதாகமம் தெளிவாக நமக்கு போதிக்கிறது. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று யோவான் 14:6-ல் இயேசு கிறிஸ்து: சொல்லியிருக்கிறார். இரட்சிப்புக்கான ஒரே வழி. இயேசு கிறிஸ்துவே, ஏனென்றால் அவஒருவர் மாத்திரமே நமது பாவங்களுக்கான கிரயத்தை செலுத்த முடியும் (ரோமர் 6:23). வேறு எந்த மதமும், பாவத்தின் ஆழம் அல்லது ஆபத்தைக் குறித்தும், அதின் விளைவைக் குறித்தும் போதிப்பதில்லை. இயேசு கிறிஸ்து மாத்திரமே தரக் கூடிய பாவத்திற்கான நித்திய விலைக்கிரயத்தை, வேறு எந்த ஒரு மதமும் அருளுவதில்லை. மதத்தை தோற்றுவித்தவர்களில் எவரும் தேவனாக இருந்து மனிதனானதில்லை (யோவான் 1:1, 14). நம் கடனைச் செலுத்தி தீர்க்கும்படி இயேசு தேவனாக இருக்கவேண்டியதாயிருந்தது. அவர் மரிக்கும் படி ஒரு மனிதனாக இருக்க வேண்டியதாயிருந்தது. இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. "இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" (அப்போஸ்தலர் 4:12). நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!" |