நீங்கள் மரிக்கும் போது நரகத்திற்கு செல்லமாட்டீர்கள்
என்று உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

"அடிப்படையில் நான் ஒரு நல்ல மனிதன் ஆகவே நான் பரலோகம் செல்லுவேன்." "சரி, நான் சில கெட்ட காரியங்களை செய்தாலும் அனேக நல்ல காரியங்களை செய்கிறேன் ஆகவே நான் பரலோகம் செல்லுவேன்."நான் வேதாகமத்தின்படி ஜீவிக்காததால் ஆண்டவர் என்னை நரகத்திற்கு அனுப்பாட்டார். காலங்கள் மாறுகிறது!" "உண்மையாகவே கெட்ட ஜனங்கள் மாத்திரம், குழந்தைகளை பாலியல் சில்மிக்ஷங்கள் செய்பவர்கள் கொலைகாரர்கள் மாத்திரம் நரகத்திற்கு செல்லுவார்கள்."

இவைகளெல்லாம் பொதுவாக அறிந்து கொள்ளபடுவதுதான்.ஆனால் உண்மை என்னவென்றால் இவைகளெள்ளாம் பொய்கள் என்பதே ஆகும். இவ்வுலகத்தின் அதிபதியான பிசாசு இவ்வகையான சிந்தனைகளை நம்தலைகளில் புகுத்துகிறான். அவனும் அவனை பின்பற்றுகிறவர்களும் தேவனுக்கு எதிராளிகள் ஆவர் ( 1 பேதுரு 5 : 8 ) சாத்தான் வஞ்சிக்கிறவனும் தன்னை நல்லவனுமாக காட்டுகிறவனாகவும் இருக்கிறான் ( 2 கொரிந்தியர் 11 : 14 ), ஆனால் அவன் தேவனுடையவர்கள் அல்லாதவர்களின் எல்லா சிந்தைகளையும் கட்டுப்படுத்துகிறவனாக இருக்கிறான். "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிnக்ஷசத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதை குருடாக்கினான்." ( 2 கொரிந்தியர் 4 : 4 ).

தேவன் சிறிய பாவங்களை கண்டுகொள்ளாதவர் என்றும் நரகம் என்பது " கெட்ட ஜனங்களுக்காக" ஆயத்தமாகபட்ருக்கிறது என்றும் நம்புவது பொய்யாக இருக்கிறது. ஏல்லா பாவங்களும் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது. அது ஒரு "சிறிய பொய்யாக" இருந்தாலும் சரி. எல்லோரும் பாவம் செய்தவர்கள். யாரும் தாங்களாகவே பரலோகம் செல்லுவதற்கு நல்லவர்கள் அல்லவே ( ரோமர் 3 : 23 ). நாம் செய்த நல்ல கிரியைகள் கெட்டவைகளை காட்டிலும் அதிகமாகவே இருப்பதால் பரலோகம் செல்ல முடியாது. அப்படியிருந்தால், நாம் எல்லோரும் இழக்கப்பட்டவர்களாய் பரலோகம் செல்ல முடியாது." அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே" ( ரோமர் 11 : 6 ). நாம் பரலோகம் செல்லுவதற்கு நாம் சம்பாதித்த நற்கிரியைகள் கொண்டு செல்லாது ( தீத்து 3 : 5 ).

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும் , வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்." ( மத்தேயு 7:13) . தேவனை விசுவாசிக்காமல் தன்னுடைய கலாச்சாரத்தில் ஒரு பாவ வழ்க்கையை ஒருவர் வாழ்ந்தால் தேவன் அதையும் மன்னிப்பது இல்லை. "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும் , கீழ்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள்" ( எபிசேயர் 2 : 1-2 ).

தேவன் இந்த உலகத்தை சிருஷ்டித்த போது, அது நல்லதாகவும் பூரணமாகவும் இருந்தது. பின்பு அவர் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்து அவர்களுக்கு அவர்களுடைய சொந்த சுயாதீனத்தைக் கொடுத்தார். ஆகவே அவர்கள் தேவனை பின்பற்றி கீழ்படிய அல்லது எதிர்க்க ஒரு தெரிந்து கொள்ளுதலை பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் சாத்தானினால் இச்சிக்கப்பட்டு தேவனுக்கு கீழ்படியாமல் பாவஞ்செய்தார்கள். இது அவர்களையும் (அவர்களுக்கு பின்வந்த நாம் எல்லோரையும்) தேவனுடைய நெருங்கிய ஐக்கியத்திலிருந்து நம்மை பிரித்துப்போட்டது. அவர் பரிசுத்தரும் பூரணரும் பாவத்தை நியாயந்தீர்க்க வேண்டியவராகவும் இருக்கிறார்.பாவிகளாக நாம் நம்மை நம்முடைய சொந்த ரீதியில் தேவனிடம் ஒப்புரவு ஆக முடியாது. ஆகவே, ஆண்டவரோடு பரலோகத்தில் நாம் சேர்க்கப்பட அவரோடு இணைக்கப்பட ஆண்டவர் ஒரு வழியை உண்டாக்கினார். "தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" ( யோவான்3 : 16 ). "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வருமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்" ( ரோமர் 6 : 23 ). இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரிக்க பிறந்தார். ஆகவே, நாம் பாவத்திற்காக மரிக்க வேண்டியது இல்லை. அவரது மரணத்திற்கு மூன்று நாளைக்கு பின்பு, அவர் கல்லரையிலிருந்து உயிர்த்தெழுந்தார் ( ரோமர் 4 : 25). அவருக்கு மரணத்தின் மீது ஜெயம் உண்டென்று நிரூபித்தார். அவர் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த பிரிவை தகர்த்து நாம் அவரை விசுவாசிக்கும் போது ,அவரோடு ஒரு நெருங்கிய தனிப்பட்ட உறவை நாம் பெற்றுக்கொள்ள செய்தார்.

"ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்" ( யோவான் 17 : 3). அநேகர் தேவனில் விசுவாசம் வைக்கிறார்கள். சாத்தானும் கூட விசுவாசிக்கிறான். ஆனால், நாம் இரட்சிப்பை பெறுவதற்கு நாம் தேவனிடம் திரும்பி , இயேசுவில் விசுவாசித்து அவர் செய்ய சொன்னதை செய்ய வேண்டும். நாம் அவரை இரட்சிக்க சொல்லி கேட்டால் அவர் நம்மை இரட்சிப்பார். "கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்கிற எவனும் இரட்சிக்கப்படுவான்" ( ரோமர் 10 : 13 ). இரட்சிப்பு என்பது நீங்கள் உங்களை இயேசுவின் கரங்களில் வைத்து நம்புவது ஆகும்.





இப்பொழுது இயேசு உங்களை ஏற்றுக்கொள்ளுகிறேன் என்கிறார். நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா?

அதை நீங்கள் நம்புவீர்களா?? உங்களது ஆத்துமாவை இரட்சிக்க நீங்கள் இயேசுவிடம் கேட்கும் போது அவர் அதைச்செய்ய திறமையுள்ளவரா? அது விசுவாசத்தின் நேரம். நீங்கள் இயேசுவுக்காக இதை செய்யும் போது அவர் உங்களுக்காக செய்வதை செய்வார். இது அவரது திறமையில் உள்ளது. உண்மையாகவே அவரது வார்த்தை சத்தியம் தான்.

"விசுவாசிக்கிற எல்லாருக்கும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலமாகவே இந்த இரட்சிப்பு தேவனிடமிருந்து வருகிறது, வித்தியாசமே இல்லை." ( ரோமர் 3 : 22 ). கிறிஸ்துவல்லாமல் இரட்சிக்கப்படும்படிக்கு வேறு வழி இல்லை என வேதாகமம் போதிக்கிறது. யோவான் 14 : 6-ல் இயேசு சொல்கிறார் "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." விசுவாசம் என்றால் இயேசுவின் புனித கரங்களில் ஆணி அடிக்கப்பட்டதை நம்பும் திறமையும் ,இயேசுவை முழுவதுமாக நம்பி நீங்கள் ஏற்படுத்தும் ±ர் அர்ப்பணம் ஆகும். "நான் குதிப்பேன் பின்பு தொங்கிகொண்டு இருப்பேன்" என்பது விசுவாசம் அல்ல. இங்கே தொங்கி கொண்டு தான் இருப்பேன் என்று சிறிய சந்தேகம் உண்டு. அது உங்களுடைய பலத்தை சார்ந்து உள்ளது. இப்பொழுது இப்படியாக நினையுங்கள் நீங்கள் பாவ மன்னிப்பு கேட்டீர்கள் என்றால் இயேசு உங்களுக்கு மன்னிக்க நீதியும் உண்மையும் உள்ளவராக இருக்கிறார் என்று இயேசு சொன்னார். ( 1 யோவான் 1:9).

அதை நீங்கள் நம்புவீர்களா?? உங்களது ஆத்துமாவை இரட்சிக்க நீங்கள் இயேசுவிடம் கேட்கும் போது அவர் அதைச்செய்ய திறமையுள்ளவரா? அது விசுவாசத்தின் நேரம். நீங்கள் இயேசுவுக்காக இதை செய்யும் போது அவர் உங்களுக்காக செய்வதை செய்வார். இது அவரது திறமையில் உள்ளது. உண்மையாகவே அவரது வார்த்தை சத்தியம் தான்.

"விசுவாசிக்கிற எல்லாருக்கும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலமாகவே இந்த இரட்சிப்பு தேவனிடமிருந்து வருகிறது, வித்தியாசமே இல்லை." ( ரோமர் 3 : 22 ). கிறிஸ்துவல்லாமல் இரட்சிக்கப்படும்படிக்கு வேறு வழி இல்லை என வேதாகமம் போதிக்கிறது. யோவான் 14 : 6-ல் இயேசு சொல்கிறார் "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."

இயேசு மாத்திரமே இரட்சிப்புக்குண்டான வழி. ஏனென்றால் அவர் மாத்திரமே நம்முடைய பாவ தண்டணையை செலுத்த முடியும் ( ரோமர் 6 : 23). வேறு எந்த மதமும் பாவத்தின் ஆழத்தையும், அபாயத்தையும் அதின் விளைவுகளையும் போதிப்பதில்லை. இயேசு கிறிஸ்து மாத்திரமே எல்லையற்ற பாவ தண்டணையை ஏற்றுக் கொண்டார் இதை வேறு மதம் கொடுப்பது இல்லை. வேற எந்த மத நிறுவனரும் தேவனாக இருந்து மனிதனாகவில்லை ( யோவான் 1 : 1, 14 ) எல்லையற்ற கடனை அடைக்கும் ஒரே வழி. இயேசு தேவனாக இருப்பதால், அவர் நம்முடைய கடனை செலுத்துகிறார். இயேசு மனிதனாக இருப்பதால் அவரால் நமக்காக மரிக்க முடியும்.இரட்சிப்பு என்பது இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தினால் மாத்திரமே கிடைக்கும். "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும்,

மனுக்ஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்" (அப்போஸ்தலர் 4:12).

"நான் மரிக்கும் போது நரகத்திற்கு போக மாட்டேன் என எப்படி எனக்கு நிச்சயமாகத் தெரியும்? என்பதற்கு பின்னிட்டு போவோம். இதற்குண்டான பதில் - "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசி அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்" (அப்போஸ்தலர் 16:13)."அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்" ( யோவான் 1 :12). நித்திய ஜீவனை ஒரு இலவச ஈவாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்."தேவனுடைய கிருனபவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்" ( ரோமர் 6 : 23 ). நீங்கள் உங்களது நித்தியத்தை இயேசுவோடு பரலோகத்தில் செலவிடலாம். அவர் வாக்கு செய்தது: "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" ( யோவான் 14 : 3).

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்களது இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பினீர்கள் என்றால், தேவனிடமிருந்து மன்னிப்பை பெற வேண்டும் என்றால், இங்கே உள்ள ஜெபத்தை சொல்லுவதால் அல்லது வேறொரு ஜெபத்தை சொல்லுவதால் உங்களுக்கு இரட்சிப்பு வராது. இயேசு கிறிஸ்துவில் விசுவாசிப்பதின் மூலம் மாத்திரமே உங்களது பாவங்கள் மன்னிக்கப்படும்.

இந்த ஜெபமானது உங்களது விசுவாசத்தை தேவனிடம் வெளிப்படுத்தவும், அவர் உங்கள் பாவங்களை மன்னித்ததிற்காக அவருக்கு நன்றி செலுத்தவுமே ஆகும்.

"தேவனே நான் ஒரு பாவி என்று எனக்கு தெரியும். என் பாவ விளைவுகளை நான் விரும்பினேன் எனவும் எனக்கு தெரியும். ஆயினும், நான் இயேசு கிறிஸ்துவில் அவரை என் இரட்சகராக விசுவாசிக்கிறேன். அவருடைய மரணமும் உயிர்தெழுதலும் எனக்கு மன்னிப்பு தந்தது என நான் விசுவாசிக்கிறேன். நான் இயேசுவில் மட்டுமே, அவரை என் கர்த்தரும் இரட்சகருமாக நம்புகிறேன். என்னை இரட்சித்ததிற்காகவும், மன்னித்ததிற்காகவும் நன்றி ஆண்டவரே! ஆமென்."




AMAZING GRACE BIBLE INSTITUTE